Home Featured நாடு மருத்துவம், கல்வி உள்ளிட்ட 719,500 ரிங்கிட் மானியம் – டாக்டர் சுப்ரா வழங்கினார்!

மருத்துவம், கல்வி உள்ளிட்ட 719,500 ரிங்கிட் மானியம் – டாக்டர் சுப்ரா வழங்கினார்!

900
0
SHARE
Ad

புத்ராஜெயா – ஆலயங்கள், பொது இயக்கங்கள், மருத்துவ உதவி, கல்வி நிதி என சுமார் 113 பிரிவுகளில், மொத்தமாக 719,500 ரிங்கிட் தொகை மானியமாக வழங்கும் நிகழ்ச்சி புத்ராஜெயாவில் அமைந்துள்ள மலேசிய சுகாதார அமைச்சில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இது குறித்து சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“ம.இ.காவின் தேசியத் தலைவர் என்னும் அடிப்படையில், நான் இந்திய சமுதாயத்தைப் பிரதிநித்து அரசாங்க அமைச்சரவையில் அமைச்சராக இருக்கின்றேன். அதன் அடிப்படையில், அரசாங்க ரீதியாக இந்தியர்களின் உணர்வுகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்யும் பிரதிநிதியாக சேவையாற்றி வருகிறேன். இந்தியர்களுக்கு எவ்விதப் பிரச்சனைகள் என்றாலும் அதற்கான தீர்வு காண வேண்டும் என்னும் அடிப்படையில்தான் ம.இ.கா முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்தப் பொறுப்பினை நாங்கள் முழுமையாகவே உணர்ந்திருக்கின்றோம். அதற்கேற்றவாறு பல்வேறு நிலையில் எந்தெந்த காரியங்களை எவ்வாறு செய்ய வேண்டும்; சவால்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்; என்பதைச் சமுதாய உணர்வுடன் முழுமையாகவே செய்து வருகிறோம்.”

#TamilSchoolmychoice

Dr.SubraMinistryhelp“இந்நாட்டில் இந்தியர்களின் எண்ணிக்கை 7% அளவுதான். 7% மக்களின் விதியைச் சரியாக நிருணையிக்க வேண்டுமென்பதன் அடிப்படையில் நாங்கள் போராடி வருகிறோம். பல இன மக்கள் வாழக்கூடிய நாட்டில் பல மாற்றங்களைன் எதிர்நோக்கி வரும் சூழ்நிலையில், காலப்போக்கில் பல விதமான சவால்களும் வந்து கொண்டேதான் இருக்கும். இத்தகையச் சவால்களை மேற்கொண்டு சரிசெய்வதற்காக சமுதாயத்தை பிரதிநிதிக்கக்கூடியவர்கள் என்னும் அடிப்படையில் எங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கின்றது.”

“சமுதாயம் என்னும் அடிப்படையில் ஒரே குரலிலும் ஒரே சிந்தனையிலும் செயல்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம். சமுதாயத்தில் பல்வேறு தரப்பினர் இருக்கின்றனர். அதில் சிலரது நோக்கம் குறை காண்பதிலேயே இருக்கும். உதாரணத்திற்கு நாட்டில் பலவிதமான அரசியல் கட்சிகள் இருக்கின்றன. அதில் இருக்கக்கூடிய சிலரது நோக்கமே என்னவென்றால், ம.இ.காவின் சேவைகளை மட்டும் குறி வைத்துத் தாக்க வேண்டுமென்பதே ஆகும். இது சமுதாய வளர்ச்சிக்கு ஒவ்வாது. மாறாக, சுயநலத்திற்காகவே குறி வைத்துத் தாக்கி வருகின்றனர்.”

“செய்து வருகின்ற நிறைகளை மறைத்து விட்டு, நிறைகளில் ஏற்பட்டுள்ள சிறு சிறு குறைகளைக் கண்டறிந்து பெரிது படுத்துவது சமுதாயக் கேடாகும். இறுதியில் சமுதாயமே இதற்குப் பலியாகின்றது. சில வேளைகளில், சமுதாயத்தில் கொந்தளிப்பையும் இவை ஏற்படுத்துகின்றன. சமுதாயக் கடப்பாடுகளைச் செய்கின்றவர்களுக்கு ஊக்குவிப்பே செய்கின்ற விஷயங்களை அறிந்து பேசுவதுதான். மாறாக, இருக்கின்ற குற்றங்களைப் பார்த்துக் கொண்டிருந்தால் தொடர்ந்து சேவையாற்றுவதற்கான ஊக்குவிப்பு இல்லாமலே போய்விடும்.”

“இந்தத் தெளிவு வர வேண்டுமாயின், சமுதாயம் என்ற அடிப்படையில் ஒற்றுமையும், நல்ல எண்ணங்களும், நற்சிந்தனைகளும் நம்மிடையே வளர வேண்டும். அப்பொழுதுதான் நம் சமுதாயம் சிறந்து விளங்க முடியும்.  நாம் அனைவருக்கும் அந்தப் பொறுப்பும் பங்கும் இருக்கின்றன. ஆக, நம்மிடையெ இருக்கின்ற பலவீனங்களைச் சரிசெய்து முன்னேற்றப் பாதையில் செல்லக்கூடிய முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்” – இவ்வாறு டாக்டர் சுப்ரா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.