Home Featured வணிகம் ‘இந்த 3 கிரீம்களைப் பயன்படுத்தாதீர்கள்’ – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

‘இந்த 3 கிரீம்களைப் பயன்படுத்தாதீர்கள்’ – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

889
0
SHARE
Ad

Teticreambanகோலாலம்பூர் – சந்தையில் விற்பனையில் இருக்கும் 3 அழகு சாதனப் பொருட்களில், நச்சு கலந்திருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, சுகாதாரத்துறை அதற்குத் தடை விதித்திருக்கிறது.

டாட்டி ஸ்கின்கேர் நைட் கிரீம், டாட்டி ஸ்கின்கேர் கிரீம் மற்றும் மோலீக் ஆன்டி- பிக்மெண்டேசன் கிரீம் (Tati Skincare Night Cream, Tati Skincare Treatment Cream, Moleek Anti Pigmentation Cream) என்ற இந்த மூன்று அழகு சாதனைப் பொருட்களில் மெர்குரி, ஹைட்ரோகியூனோன் மற்றும் ட்ரெடினோயின் ஆகிய நச்சுத்தன்மை கொண்ட இரசாயனங்கள் இருப்பது உறுதியாகியிருக்கிறது.

“விற்பனையாளர்களும், விநியோகஸ்தர்களும் இப்பொருட்களை விற்பனை செய்வதை உடனே நிறுத்த வேண்டும் என்று எச்சரித்திருக்கிறோம்” என்று தேசிய சுகாதாரத்துறை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிசாம் அப்துல்லா அறிவித்தார்.

#TamilSchoolmychoice

எனவே வாடிக்கையாளர்கள் இப்பொருட்களைப் பயன்படுத்துவதை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.