Home Featured நாடு ஜாகிர் நாயக் ‘மலேசிய நிரந்தர வசிப்பிட அனுமதி’ பெற்று 5 ஆண்டுகள் ஆகிவிட்டன!

ஜாகிர் நாயக் ‘மலேசிய நிரந்தர வசிப்பிட அனுமதி’ பெற்று 5 ஆண்டுகள் ஆகிவிட்டன!

1121
0
SHARE
Ad

zakir-naikகோலாலம்பூர் – இந்தியாவால் தேடப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக், மலேசியாவில் நிரந்தர வசிப்பிட அனுமதி பெற்றிருப்பதை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி இன்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தினார்.

அதுவும் இந்த அனுமதி அவருக்கு, 5 ஆண்டுகளுக்கு முன்பே வழங்கப்பட்டு விட்டதாகவும் சாஹிட் தெரிவித்திருக்கிறார்.

எனினும், ஜாகிர் நாயக் மலேசியாவில் மட்டும் தங்குவதில்லை என்றும், அவர் பல்வேறு நாடுகளுக்குச் சென்று தங்குகிறார் என்றும் சாஹிட் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

ஜாகிர் நாயக்கிற்கு கடந்த 2013-ம் ஆண்டு, மலேசியாவால் ‘தோக்கோ மால் ஹிஜ்ரா’ என்ற விருது வழங்கப்பட்ட போதே, அவருக்கு மலேசியக் குடியுரிமையும் வழங்கப்பட்டுவிட்டதாக, கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த முக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆனால் அதனை மறுத்த மலேசிய அரசு, ஜாகிர் நாயக்கிற்கு குடியுரிமை வழங்கப்படவில்லை என்றும், நிரந்தர வசிப்பிட அனுமதிக்கு மட்டுமே விண்ணப்பித்திருக்கிறார் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.