மெல்பெர்ன் – ஆஸ்திரேலியாவில் நிபுணத்துவப் பிரிவுகளில், தற்காலிகமாகப் பணியாற்ற வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ‘457 விசா’ என்ற திட்டம் இரத்து செய்யப்பட்டது.
அந்த விசாவைப் பயன்படுத்தி அங்கு பணியாற்றி வந்த 95,000 தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவர்.
ஆஸ்திலேயர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து வருவதையடுத்து, அந்த விசாவை அந்நாட்டு அரசு உடனடியாக இரத்து செய்தவதாக அறிவித்திருக்கிறது.
“நாங்கள் ஒரு குடிநுழைவு தேசம். ஆனால் உண்மை என்னவென்றால், ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியத் தொழிலாளர்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும். அதனால் 457 விசாவை இரத்து செய்கிறோம். இந்த விசாவின் மூலம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தற்காலிகமாக ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வந்தனர்” என்று ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கால்ம் டர்ன்புல் அறிவித்திருக்கிறார்.
சீனா மற்றும் ஐக்கிய நாடுகளையடுத்து, இந்த விசாவின் மூலம் ஆஸ்திரேலியாவில் பெரும்பான்மையான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.