கோலாலம்பூர் – சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இருக்கும் 50-க்கும் மேற்பட்ட மலேசியர்கள், நாடு திரும்பத் திட்டமிட்டிருப்பதாக தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே 8 பேர் நாடு திரும்பியிருக்கும் நிலையில், இன்னும் 49 -க்கும் மேற்பட்ட மலேசியர்கள் விரைவில் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் காலிட் குறிப்பிட்டிருக்கிறார்.
இது குறித்து நேற்று திங்கட்கிழமை சபா மலேசியாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய காலிட், “அவர்களில் சிலரின் கணவர்கள் இறந்துவிட்டனர். மற்ற ஐஎஸ் தீவிரவாதிகளைத் திருமணம் செய்திருக்கின்றனர். அவர்களின் பிள்ளைகளை மற்ற தீவிரவாதிகளின் குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.