இலண்டன் – கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு பிரிட்டிஷ் பவுண்டின் நாணய மதிப்பு உலக சந்தைகளில் கிடுகிடுவென உயர்ந்தது. பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஜூன் மாதத்தில் திடீர் பொதுத் தேர்தலை அறிவித்ததைத் தொடர்ந்து பிரிட்டிஷ் பவுண்டின் நாணய மதிப்பு உயர்ந்ததாக பொருளாதார வல்லுநர்கள் கருத்துரைத்திருக்கின்றனர்.
அண்மையக் காலம் வரை 1 பிரிட்டிஷ் பவுண்டுக்கு சுமார் 5 மலேசிய ரிங்கிட் என்ற அளவில் நாணயப் பரிமாற்றங்கள் நடந்து வந்த வேளையில், நேற்று செவ்வாய்க்கிழமை 1 பவுண்டுக்கு 5.67 ரிங்கிட் என்ற அளவில் பவுண்டின் மதிப்பு உயர்ந்தது.
இதன் காரணமாக இலண்டனில் கல்வி பயின்று வரும் மலேசிய மாணவர்கள் நிதிச் சுமைகளை எதிர்நோக்குவார்கள்.