Home Featured உலகம் முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் மருத்துவமனையில் அனுமதி!

முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் மருத்துவமனையில் அனுமதி!

747
0
SHARE
Ad

ஹோஸ்டன் – முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ.புஷ், உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் ஹோஸ்டன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த 3 மாதங்களாக சுவாசக் கோளாறில் அவதிப்பட்டு வந்த அவருக்கு, லேசான நிமோனியா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

#TamilSchoolmychoice

92 வயதான ஜார்ஜ் எச்.டபிள்யூ.புஷ், கடந்த வெள்ளிக்கிழமை இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று, வீடு திரும்பிய நிலையில், தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

எனினும், தீவிர சிகிச்சையில் அவர் குணமடைந்து வருவதாக அவரது செய்தித் தொடர்பாளர் ஜிம் எம்சி கிராத் கூறியிருக்கிறார்.