புதுடெல்லி – இலங்கையில் நடைபெறவிருக்கும் அனைத்துலக புத்தமத மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மே மாதம் இலங்கை செல்லவிருக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் கௌதம புத்தரின் பிறந்தநாளை ‘விசாக்’ புனித நாளாக புத்த மதத்தினர் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் இந்த ஆண்டு, கௌதம புத்தரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை, வரும் மே 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஐநா இலங்கையில் கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறது.
இந்நிலையில், அவ்விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி, இலங்கை செல்கிறார். அம்மாநாட்டில், உலகின் பல நாடுகளிலிருந்தும் முக்கியப் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.