Home Featured உலகம் பாரிசில் மீண்டும் துப்பாக்கிச் சூடு!

பாரிசில் மீண்டும் துப்பாக்கிச் சூடு!

1002
0
SHARE
Ad

Champs-Elysees-paris-20042017பாரிஸ் – பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் மீண்டும் நடத்தப்பட்டிருக்கும் பயங்கரவாதத் தாக்குலில் காவல் துறையைச் சார்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதோடு, தாக்குதல்காரனும் பதில் தாக்குதலில் மரணமடைந்தான்.

இந்தத் தாக்குதலை நடத்தியது எங்கள் இயக்கத்தின் போராளிதான் என ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் உடனடியாகப் பொறுப்பேற்றுக் கொண்டது.

தாக்குதலை நடத்தியவன் பிரான்ஸ் நாட்டின் குடிமகன் என்றும் ஏற்கனவே, 2001 காவல் துறையினரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவன் என்றும் தகவல்கள் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

காவல் துறை அதிகாரியை நோக்கி அவன் சுட்டதில் அவர் மரணமடைந்தார்.

தொடர்ந்து நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் தாக்குதல்காரனும் சுட்டுக் கொல்லப்பட்டான்.