Home Featured நாடு பள்ளி முன்பு ‘கேங் 24’ அட்டூழியம் – 13 மாணவர்கள் உட்பட 18 பேர் கைது!

பள்ளி முன்பு ‘கேங் 24’ அட்டூழியம் – 13 மாணவர்கள் உட்பட 18 பேர் கைது!

888
0
SHARE
Ad

Gang24கோலாலம்பூர் – கிள்ளான் ஸ்ரீஅண்டலாஸ் பள்ளியின் முன்பு, இளைஞர்கள் சிலர் ‘கேங் 24’ பதாகைகளை ஏந்திக் கொண்டும், பட்டாசுகளை வெடித்துக் கொண்டும், கேக் வெட்டியும் அட்டூழியம் செய்த காணொளி நட்பு ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர், அக்காணொளிகளைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருப்பதோடு, 13 மாணவர்கள் உட்பட மொத்தம் 18 பேர் இது தொடர்பாகக் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய இன்னும் பலரை காவல்துறை தேடி வருவதாகவும், அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் காலிட் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

மாணவர்களின் இச்செயல் கல்வியமைச்சை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கிறது. கல்வி அமைச்சர் டத்தோ மாட்சிர் காலிட், சம்பந்தப்பட்டவர்களின் மீது பாரபட்சம் பார்க்காமல் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறார்.