புதுடெல்லி – தீவிரவாதத்திற்கு துணை புரிந்ததாகச் சந்தேகிக்கப்படும் மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக, இந்தியாவின் தேசியப் புலனாய்வு முகமையின் (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம், இரண்டாவது முறையாகப் பிணையில் வெளிவர முடியாத கைது ஆணையைப் பிறப்பித்திருக்கிறது.
நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று ஜாகிர் நாயக்கிற்கு எதிராக ஏற்கனவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், இதுவரை ஜாகிர் நாயக் நேரில் ஆஜராகாததால், இந்தக் கைது ஆணையைப் பிறப்பித்திருக்கிறது இந்திய அரசு.
மேலும், மலேசியா உட்பட பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் அடைக்கலம் புகுந்து வாழ்ந்து வரும் ஜாகிர் நாயக்கைப் பிடித்து, இந்தியாவிடம் ஒப்படைக்க இண்டர்போலின் உதவியையும் இந்திய அரசு நாடியிருக்கிறது.
இதனிடையே, மலேசியாவில் நிரந்தர வசிப்பிட அந்தஸ்து பெற்றிருக்கும் ஜாகிர் நாயக், அவ்வப்போது மலேசியாவிற்கு வந்து செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.