புதுடில்லி – 5 நாள் விசாரணைகளுக்குப் பின்னர் இன்று திங்கட்கிழமை பிற்பகலில் சென்னையிலிருந்து மீண்டும் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்ட டிடிவி தினகரனுக்கு மே 15 வரை நீதிமன்றக் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து அவர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவுக்கும் மே 15 வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டிருப்பதால் அவரும் அதே திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.