Home Featured நாடு செப்டம்பருக்குள் பொதுத் தேர்தல்: பாஸ் கணிப்பு

செப்டம்பருக்குள் பொதுத் தேர்தல்: பாஸ் கணிப்பு

858
0
SHARE
Ad

Mustapha-Ali-feature

கோலாலம்பூர் – பாஸ் கட்சியின் தேர்தல் நடவடிக்கை இயக்குநரான டத்தோ முஸ்தபா அலி (படம்) எதிர்வரும் செப்டம்பருக்குள் பொதுத் தேர்தல் நடைபெறும் வாய்ப்பு இருப்பதாக கணித்திருக்கிறார்.

காரணம், தேர்தல் ஆணையம் முன்மொழிந்திருக்கும் தொகுதி எல்லை மாற்றங்கள் முதலில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்வரும் ஜூலை மாதத்தில் நாடாளுமன்றத்தில் இந்த தொகுதி எல்லை மாற்றங்கள் சமர்ப்பிக்கப்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

14-வது பொதுத் தேர்தல் ஜூன் 2018க்குள் நடைபெற்றாக வேண்டும் என்றும் முஸ்தபா கூறியிருக்கின்றார்.

பாஸ் கட்சியைப் பொறுத்தவரை எதிர்வரும் பொதுத் தேர்தலில் 4 மாநிலங்களையும், 40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் கைப்பற்ற பாஸ் நோக்கம் கொண்டிருப்பதாகவும் முஸ்தபா தெரிவித்திருக்கின்றார்.

அலோர்ஸ்டாரில் நடைபெற்று நேற்றுடன் நிறைவு பெற்ற பாஸ் கட்சியின் 63-வது தேசிய மாநாட்டில் நடந்த விவாதங்களுக்கு பதிலளிக்கும் வகையில் முஸ்தபா தனது கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.