Home Featured இந்தியா இந்தியா தாக்குதலில் 7 பாகிஸ்தான் இராணுவத்தினர் பலி!

இந்தியா தாக்குதலில் 7 பாகிஸ்தான் இராணுவத்தினர் பலி!

821
0
SHARE
Ad

Indian Army marks Army Day in New Delhi, Indiaபுதுடில்லி – இரண்டு இராணுவ வீரர்களைக் கொன்று அவர்களின் உடல்களைச் சிதைத்து அனுப்பிய பாகிஸ்தான் இராணுவத்திற்கு பதிலடி தரும் விதமாக, நேற்றிரவு இந்திய இராணுவம் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலுள்ள இரண்டு பாகிஸ்தான் இராணுவ முகாம்கள் மீது நடத்திய தாக்குதலில் 7 பாகிஸ்தான் இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

ஜம்மு மாநிலத்தில் உள்ள மெந்தார் பகுதியில் உள்ள எல்லைப் பகுதியில் இரண்டு பாகிஸ்தான் முகாம்கள் மீது இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்தப் புதிய மோதல்களைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ சர்ச்சைகள் மேலும் மோசமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.