Home Featured கலையுலகம் ஆங்கிலப் படங்களை முறியடித்து அமெரிக்காவிலும் பாகுபலி சாதனை!

ஆங்கிலப் படங்களை முறியடித்து அமெரிக்காவிலும் பாகுபலி சாதனை!

873
0
SHARE
Ad

2015-04-10_226_bahubali (2)வாஷிங்டன் – இந்தியாவில் இதுவரை வெளியிடப்பட்ட படங்களிலேயே அதிக வசூல் சாதனை புரிந்த படம் என்ற பெருமையைப் பெற்றுவிட்ட பாகுபலி -2 திரைப்படம் அமெரிக்காவிலும், ஆங்கிலப் படங்களின் வசூல்களை முறியடித்து சாதனை புரிந்து வருகின்றது.

அமெரிக்காவில் இருந்து வெளியிடப்படும் வசூல் விவரங்களின்படி, தற்போது முதல் நிலையில் இருக்கும் ஆங்கிலப் படம் ‘ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்-8’ திரைப்படமாகும். இதுவரையில் 1 பில்லியன் அமெரிக்கா டாலருக்கும் மேல் வசூலித்து விட்டது.

ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட பாகுபலி, பல ஆங்கிலப் படங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அமெரிக்காவில் வார இறுதி வசூலில் 3-வது இடத்தை எடுத்த எடுப்பிலேயே பெற்றுவிட்டது.

#TamilSchoolmychoice

அடுத்த சில நாட்களில் இதன் வசூல் மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

bahubali-usa-box off-april30

பாகுபலி-2, மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பதைக் காட்டும், பாக்ஸ் ஆபிஸ் மோஜோ என்ற இணையத் தளத்தின் விவரங்கள்…

இந்த வசூல் சாதனைகளின் மூலம், ஹாலிவுட் படவுலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றது பாகுபலி. ஏற்கனவே, இந்தியத் திரைப்படங்களிலும், இந்திய சந்தைகளிலும் பெரும் ஆர்வம் காட்டிவரும் அமெரிக்க திரைப்பட நிறுவனங்கள், தொடர்ந்து இந்தியாவின் மீது கவனம் செலுத்துவதை பாகுபலி-2 படத்தின் வசூல் சாதனைகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.