Home Featured நாடு சமயப்பள்ளி மாணவர் மரணம்: உதவி வார்டன் பிணையில் விடுதலை!

சமயப்பள்ளி மாணவர் மரணம்: உதவி வார்டன் பிணையில் விடுதலை!

989
0
SHARE
Ad

religious school assistant wardenகோத்தா திங்கி – சமயப் பள்ளி மாணவர் மொகமட் தாகிவ், சித்ரவதைக்குள்ளாகி மரணமடைந்த வழக்கில், கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த அப்பள்ளியின் உதவி வார்டன், இன்று புதன்கிழமை, 20,000 ரிங்கிட் பிணைத்தொகையில் விடுவிக்கப்பட்டார்.

29 வயதான அந்நபரை, குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 118-ன் கீழ், ஒருவரின் பாதுகாப்பு உத்ரவாதத்துடன் விடுவிக்க நீதிபதி சலாவதி ஜாம்பரி உத்தரவிட்டார்.

இவ்வழக்கு குற்றவியல் சட்டம், பிரிவு 302-ல் கீழ், கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.