Home Featured நாடு ‘நாசிலெமாக் மடிக்கத் தான் லாயக்கு’ – நாளிதழை விமர்சித்த ஜோகூர் சுல்தான்!

‘நாசிலெமாக் மடிக்கத் தான் லாயக்கு’ – நாளிதழை விமர்சித்த ஜோகூர் சுல்தான்!

834
0
SHARE
Ad

Johor Sultanகோலாலம்பூர் – கடந்த 2014-ம் ஆண்டு, கையெழுத்திடப்பட்ட ஜோகூர் வீட்டுவசதி மற்றும் உண்மை சொத்து வாரிய மசோதா குறித்துக் கேள்வி எழுப்பிய நாளிதழ் ஒன்றை ஜோகூர் சுல்தான் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

இத்திட்டத்தில் சுல்தானின் பங்களிப்புக் குறித்து கேள்வி எழுப்பியிருந்த அந்நாளிதழின் கட்டுரை குறித்து மாநில சட்டமன்றக் கூட்டத்தில் பேசிய சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார், “அது போன்ற மேலோட்டமான எண்ணம் கொண்ட ஊடகவியலாளர்களும் இருந்து கொண்டு, சுல்தானின் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்துகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில், அது போன்ற நாளிதழ்கள் எந்தப் பயனும் இல்லாதவை. அவை, ‘நாசிலெமாக்’ மடிக்கத் தான் லாயக்கு” என்று அதிருப்தியுடன் தெரிவித்திருக்கிறார்.

எனினும், அந்த நாளிதழின் பெயரை அதிகாரிகள் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.