Home Featured உலகம் போப் பிரான்சிசைச் சந்திக்கிறார் டிரம்ப்!

போப் பிரான்சிசைச் சந்திக்கிறார் டிரம்ப்!

1096
0
SHARE
Ad

Trumpரோம் – மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வரும் மே 24-ம் தேதி, ரோம் நகரில், போப் பிரான்சிசைச் சந்திக்கவிருப்பதாக வாடிகன் அறிவித்திருக்கிறது.

போப் பிரான்சிசைச் சந்தித்த பிறகு, நோட்டோ மாநாடு, சிசிலியில் நடைபெறவிருக்கும் 7 நாடுகள் பங்கேற்கும் மற்றொரு மாநாடு என பல்வேறு நிகழ்ச்சிகளில் டிரம்ப் கலந்து கொள்ளவிருக்கிறார்.

டிரம்ப் – போப் பிரான்சிஸ் இடையேயான சந்திப்பு, வரும் மே 24-ம் தேதி, அப்போஸ்தலிக் அரண்மனையில் காலை 8.30 மணியளவில் நடைபெறவிருப்பதாகவும் வாடிகன் அறிவித்திருக்கிறது.