Home Featured நாடு பிரவின் இறந்தது கொலையா? தற்கொலையா? – இரு தரப்பிலும் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள்!

பிரவின் இறந்தது கொலையா? தற்கொலையா? – இரு தரப்பிலும் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள்!

1099
0
SHARE
Ad

Nilaistudentdiesநீலாய் – சிரம்பான் நீலாய் டேசா ஜாஸ்மின் வட்டாரத்தில், 15 வயது சிறுவனின் வாயில், அவ்வட்டாரத்தைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர் , விஷத்தை ஊற்றிக் கொன்றதாகக் கூறப்பட்ட சம்பவத்தில், தற்போது முன்னுக்குப் பின் முரணான செய்திகள் வெளியாகின்றன.

இறந்த மாணவர் எஸ்.பிரவின், தானே விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில், பிரவினின் தந்தை எம்.செல்வராஜா அதனை மறுத்திருக்கிறார்.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நேரத்தில், வாய் பேச முடியாத நிலையில் இருந்த பிரவின், தனக்கு நேர்ந்ததை காவல்துறையிடம் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்ததாக செல்வராஜா கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

“அவர் பேச முடியாத நிலையில்  இருந்தார். எனவே, நடந்தவற்றைக் கைப்பட எழுதி, வாக்குமூலம் பெற வந்த காவல்துறை அதிகாரியிடமும், மாநில கல்வித் துறை அதிகாரியிடமும் கொடுத்தார்”என்று செல்வராஜா ‘தி ஸ்டார்’ இணையதளத்திடம் கூறியிருக்கிறார்.

கடந்த வியாழக்கிழமை, நீலாய் ஓசிபிடி கண்காணிப்பாளர் சல்டினோ சலுதின் கூறுகையில், அச்சிறுவன் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாகத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பிரவினின் பிரேதப்பரிசோதனை அறிக்கையில், அச்சிறுவன் கீழே தள்ளி விடப்பட்டதற்கோ அல்லது வலுக்கட்டாயமாக விஷம் குடிக்க வைத்ததற்கோ எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று கூறப்பட்டிருக்கிறது.

ஆனால், செல்வராஜு கூறுகையில், “எனது மகன் அச்சம்பவம் நடந்து 1 வாரத்திற்குப் பிறகு தான் இறந்தார். அந்த தழும்புகள் ஒருவாரத்தில் மறைந்திருக்கும் அதனால் தான் பிரேதப் பரிசோதனையில் தெரியவில்லை” என்று கூறியிருக்கிறார்.