Home Featured கலையுலகம் பாகுபலி 2 – 1000 கோடியைத் தாண்டிய முதல் இந்தியப் படம்!

பாகுபலி 2 – 1000 கோடியைத் தாண்டிய முதல் இந்தியப் படம்!

1201
0
SHARE
Ad

bahubali-2-cross 1000 crore

புதுடில்லி – இதுவரை வெளிவந்த இந்தியப் படங்களிலேயே 1000 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய முதல் இந்தியப் படம் என்ற பெருமையை பாகுபலி-2 பெற்றிருக்கின்றது.

இதனை பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹார் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கின்றார்.

#TamilSchoolmychoice

தொடர்ந்து பல திரையுலகப் பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பாகுபலியின் கதாநாயகன் பிரபாஸ் தனது முகநூல் பக்கத்தில் தனது இரசிகர்களுக்கு உருக்கமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் நன்றி தெரிவித்திருப்பதோடு, தனக்கு வாழ்நாள் சாதனைப் படமாக பாகுபலியை உருவாக்கித் தந்த இயக்குநர் ராஜமௌலிக்கும் நன்றி தெரிவித்திருக்கின்றார்.