சியோல் – ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தென்கொரியாவின் முதல் பெண் அதிபரான பார்க் கியென் ஹை, அரசியல் சாசன நீதிமன்றத்தால் பதவி நீக்கப்பட்டதையடுத்து, அப்பதவிக்கான அதிபர் தேர்தல் இன்று மே 9-ம் தேதி தொடங்கியது.
கடந்த டிசம்பர் மாதம் பார்க் மீது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனையடுத்து, நடைபெற்று வந்த விசாரணையின் முடிவில் கடந்த மார்ச் 10-ம் தேதி, பார்க் கியென் ஹை அரசியல் சாசன நீதிமன்றத்தால், அதிபர் பதவியிலிருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டார்.
இந்நிலையில், அதிபர் பதவிக்கு மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், தென்கொரிய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் மூன் ஜாவும், மக்கள் கட்சியின் தலைவர் ஆன் சியோ சூவும் முன்னிலை வேட்பாளர்களாகக் கருதப்படுகின்றனர்.