பூச்சோங் காசல்பீல்டு தமிழ்ப் பள்ளியில் ஸ்டார் புரோடிஜி கற்றல் கற்பித்தல் பட்டறை!

    818
    0
    SHARE
    Ad

    Puchong star prodigiகோலாலம்பூர் – பூச்சோங்! இந்த வாரம் ஸ்டார் புரோடிஜி நிறுவனத்தாரின் பயணம் இந்த அழகிய சிறு பட்டணைத்தை நோக்கித்தான். ஒரு கால கட்டத்தில் ஈயக் குட்டைகளும் ரப்பர் மரக்காடுகளுமாக நிறைந்து காணப்பட்ட பகுதி இது! இன்று,  பூச்சோங்கின் நிலை வேறு..அதிகமான மக்கள் குடியேற்றமும், வர்த்தக வளாகங்களும் கொண்ட அடர்த்தியான பகுதியாக மாறி விட்டது.

    இங்கே மிகவும் பிரசித்திப் பெற்ற சுந்தரராஜ பெருமாள் ஆலயத்திற்கு பக்கத்தில் அமைந்திருக்கும் காசல் பீல்டு தமிழ் பள்ளியில்; அண்மையில் V.A.K கற்றல் கற்பித்தல் பட்டறையினை ஸ்டார் புரோடிஜியோடு இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர், இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர். சுமார் 30 ஆசிரியர்கள் கலந்துக் கொண்ட இப்பட்டறையில், “பார்த்தல், கேட்டல், தொடுதல் என்ற கற்றல் முறையைக் கொண்டவர்களின் குணாதிசயங்கள் , அவற்றை கற்றலுக்கு பயன்படுத்தும் முறை, கற்றல் குறைபாடுகள்” போன்ற பலதரப்பட்ட வடிவங்களில் இப்பட்டறை வடிவமைக்கப் பெற்றிருந்தது.

    மேலும், ஆசிரியர் பலரும் சர்வ சாதாரணமாக கடந்து போகும் மாணவர்களின் விசித்திரமான  குணாதிசயங்களையும் உடல் மொழிகளையும் பட்டியலிட்டு அவற்றை எவ்வாறு கையாளலாம்; ஏன் அத்தகைய குணாதிசயங்களை மாணவர்கள் வெளிக்காட்டுகின்றார்கள் போன்ற பல அற்புதமான தகவல்களை, ஸ்டார் புரோடிஜியின் தோற்றுனர்/பயிற்சியாளர் செந்தில்நாதன் சிறப்பாக பகிர்ந்துக் கொண்டார்.

    #TamilSchoolmychoice

    கால மாற்றத்திற்கேற்ப நிறைய மாற்றங்கள் கல்வித் துறையில் ஊடுறுவி விட்டன. அதை ஏற்காமல் புரந்தள்ளிவிடவும் முடியாது; பிடிவாதமாக மறைத்து வைக்கவும் முடியாது. ஏனெனில், தற்போதைய மாணவர்கள் அன்னாளைய மாணவர்கள் போல் கிடையாது..அவர்களை அவர்கள் வழிக்குச் சென்று தான்,  பக்குவத்தோடு கையாளும் சூத்திரத்தை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு இது போன்ற கற்றல் கற்பித்தல் பட்டறைகள் சிறப்பான தீர்வாக,  வாழ்த்துபவர்களுக்கு (வாத்தியார்) அமையுமென ஸ்டார் புரோடிஜியின் இணை தோற்றுனர்/ பட்டறை ஒருங்கிணைப்பாளர் கண்ணா சிம்மாதிரி தன் எண்ணங்களை பகிர்ந்துக் கொண்டார்.

    அதோடு பூச்சோங்கின் அபரிதமான வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் வகையில், இப்பள்ளியின் கல்வி தேர்ச்சி விகிதமும் அண்மைய காலமா ஏற்றம் கண்டு வருவதாக காசல் பீல்டு தமிழ் பள்ளியின் பெ.ஆ.ச தலைவர் திரு.மாறன் குறிப்பிட்டார். எனவே மாணவர்களை குணமறிந்து கையாளும் மிகப் பெரிய அரப்பணி ஆசிரியர் பணியாகும்..இப்பணியில் என்றும் ஸ்டார் புரோடிஜியின் கற்றல் கற்பித்தல் துணை நிற்கும்! மேல் விபரங்களுக்கு 012 – 560 7003 கண்ணாவோடு தொடர்புக் கொள்ளலாம்.