Home Featured நாடு ஸ்டார் புரோடிஜி கற்றல் கற்பித்தல் பட்டறை: ஒரே கூரையின் கீழ் 4 பள்ளிகளின் சங்கமம்!

ஸ்டார் புரோடிஜி கற்றல் கற்பித்தல் பட்டறை: ஒரே கூரையின் கீழ் 4 பள்ளிகளின் சங்கமம்!

1128
0
SHARE
Ad

Starprodigi2கோலாலம்பூர் – அண்மையில், கோலாசிலாங்கூரைச் சேர்ந்த தேசிய வகை லாடாங் ராஜா மூசா தமிழ்பள்ளி, தேசிய வகை லாடாங் கம்போங் பாரு தமிழ்பள்ளி, தேசிய வகை லாடாங் ரிவர்சைட் தமிழ்பள்ளி மற்றும் தேசிய வகை காந்திஜி தமிழ்பள்ளி ஆகிய நான்கு பள்ளிகளும் ஒன்றிணைந்து, தங்கள் பள்ளிகளின் ஆசிரியர்களுக்காக விஏகே (V.A.K) எனப்படும் கற்றல் கற்பித்தல் பட்டறையை ஸ்டார் புரோடிஜி நிறுவனத்தோடு கைகோர்த்து, சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். மதிய வேளையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்பட்டறை “தேசிய வகை லாடாங் ராஜா மூசா” தமிழ்பள்ளியில், சுமார் முப்பது ஆசிரியர்களின் பங்கேற்போடு தொடங்கியது.

Star Pro digiமதிய உணவிற்கு பிறகு தொடங்கப்படும் பட்டறை..வீட்டிற்கு செல்ல தயாராக காத்திருந்த வாகனங்கள்…கிட்டத்தட்ட “பேட்டரியின்” சக்தி தீர்ந்த மனநிலை!!! பட்டறையின் தொடக்கத்தில் சுமார் ஓர் அரை மணி நேரத்திற்கு இத்தகைய மனநிலையில் ஆசிரியர்கள் அமர்ந்திருந்தாலும் கூட , நிகழ்ச்சியின் இறுதியில் “அதற்குள் பட்டறை முடிந்து விட்டதா” என சொல்லும் அளவிற்கு நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்பட்டதானது, இந்த கற்றல் கற்பித்தல் (V.A.K) பட்டறைக்கு கிடைத்து வரும் சிறந்த அங்கீகாரமாகும். கற்றல் முறைகள், மாணவர்களின் கற்றல் குணாதிசயங்கள், கற்றல் குறைபாடுகள் போன்ற முக்கிய தலைப்புகளையொட்டி ஸ்டார் புரோடிஜியின் பயிற்றுனர் செந்தில்நாதன் தெளிவாக விளக்கமளித்தார். இதன் வழி ஆசிரியர்கள் அவர்களது கற்றல் முறையைப் பற்றி தெரிந்துக் கொண்டதோடு, இனி அவர்களது மாணவர்களின் கற்றல் முறையை அடையாளம் கண்டு அதற்கேற்ற வகையில் ஆசிரியர்கள்  செயல்பட, இந்த V.A.K மிகச் சிறந்த ஆயுதமாகுமென செந்தில் நம்பிக்கை தெரிவித்தார்.

Starprodigi1கோலாசிலாங்கூர் பகுதியைச் சேர்ந்த இந்நான்கு பள்ளிகளும் குறைந்த அளவில் மாணவர்கள் எண்ணிக்கையைக் (SKM) கொண்ட பள்ளிகளாகும்.இருப்பினும், ஒரு சிறந்த நோக்கத்துக்காக நடைபெற்ற இப்பட்டறையை நாளை நாளை என்று காலம் தாழ்த்தாமல், உடனுக்குடன் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்ததானது சாலச் சிறந்த செயலென ஸ்டார் புரோடிஜியின் ஒருங்கிணைப்பாளரும் பேச்சாளருமான கண்ணா சிம்மாதிரி (விழுதுகள்) தெரிவித்தார். எனவே எஸ்கேஎம் (SKM) எனப்படும் குறைந்த அளவிலான மாணவர்கள் எண்ணிக்கையைக் கொண்ட  இது போன்ற பள்ளிகள் தங்களது இடங்களில் இந்த கற்றல் கற்பித்தல் (V.A.K)  பட்டறையினை ஏற்பாடு செய்ய எண்ணம் கொண்டிருப்பின்  012 560 700 என்ற எண்ணில் கண்ணா-வோடு தொடர்புக் கொள்ளலாம்.