Home Featured கலையுலகம் நிஜவாழ்விலும் தேவசேனாவை மணக்கிறாரா பாகுபலி?

நிஜவாழ்விலும் தேவசேனாவை மணக்கிறாரா பாகுபலி?

1072
0
SHARE
Ad

Prabasசென்னை – பிரபாஸ், அனுஷ்கா ஜோடி ‘பாகுபலி 2’ திரைப்படத்தில் உலகளவில் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. தேவசேனாவாக அனுஷ்கா, அமரேந்திர பாகுபலியாக நடித்த பிரபாசுக்கு இணையாக, வீரமும், தீரமும் நிறைந்த இளவரசியாக நடித்திருந்தார்.

இந்நிலையில், இந்த ஜோடி நிஜவாழ்விலும் இணையப் போவதாக தெலுங்கு வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது.

அனுஷ்காவிற்கு இப்போது 35 வயதாகிறது. அதேவேளையில் பிரபாசுக்கும் 37 வயதாவதால், இருவீட்டிலும் அவர்களுக்கு திருமணம் செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

மேலும், பிரபாசும், அனுஷ்காவும் ஒருவரையொருவர் விரும்பத் தொடங்கியிருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.