ஈப்போ – பேராக் மாநிலத்தில் மட்டும் கிட்டத்தட்ட 5,845 பேர் திவாலானவர்கள் என மலேசிய எம்டிஐ (Malaysian Insolvency Department ) அறிவித்திருக்கிறது.
கடந்த 2012-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரையில், 35 வயதிலிருந்து 44 வயது வரையிலான தனிநபர்கள் திவாலாகியிருப்பதாக பேராக் இயக்குநர் ஹெஸ்லின் ஹால்டி தெரிவித்திருக்கிறார்.
அவர்களில் பெரும்பாலனவர்கள் தனிப்பட்ட பிரச்சினைகளால், வீட்டுக் கடன், வாகனக் கடனைக் கட்ட முடியாமல் போனவர்கள் என்றும் ஹெஸ்லின் குறிப்பிட்டிருக்கிறார்.
நீதிமன்றம் மூலம் முழுத்தொகையைச் செலுத்திய பின்னரே, திவாலானவர்கள் பட்டியலில் இருந்து அவர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்றும் ஹெஸ்லின் தெரிவித்திருக்கிறார்.
அதேவேளையில், 2012-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டு வரையில், நாடெங்கிலும் மொத்தம் 101,958 பேர் திவாலானவர்கள் என்றும் ஹெஸ்லின் தெரிவித்திருக்கிறார்.