Home Featured நாடு “தாதியர்கள்: சுகாதாரத் துறையில் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய, தலைமையேற்கும் ஒரு குரல்”

“தாதியர்கள்: சுகாதாரத் துறையில் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய, தலைமையேற்கும் ஒரு குரல்”

1099
0
SHARE
Ad

Dr.subranursewishகோலாலம்பூர் – மலேசிய  சுகாதார  அமைச்சரும் மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர்  ச. சுப்பிரமணியம்  அவர்களின் பத்திரிகை செய்தி:-

“உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு மே மாதமும் 12 -ம் தேதி, அனைத்துலக தாதியர்  தினம் (International Nurses Day) கொண்டாடப்பட்டு வருகின்றது”

“தாதியர்கள்  சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பையும் அவர்களின் சேவைத் தியாகங்களையும் சிறப்பாக நினைவு கூறும் பொருட்டும், கடந்த 1965-ம் ஆண்டிலிருந்து நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12-ம் நாளை சிறப்பாக நினைவுகூறும் வகையிலும் இத்தினம் அனைத்துலக அளவில் தாதியர் தினமாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.”

#TamilSchoolmychoice

“தாதியர் தொழில் என்பது ஒரு புனிதமான தொழில் மட்டுமின்றி அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படக்கூடிய ஒரு தொழிலும் ஆகும். தன்னலத்தைக் கருதாமல் பொது நலத்தைக் கருதில் கொண்டு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுபவர்களே தாதியர்கள். சிகிச்சைக்கு வரும் ஒரு நோயாளிக்குச் சிகிச்சை என்பது ஒரு பகுதி மட்டுமே. அதைத்தவிர, அன்பும் அரவணைப்பும் நிறைந்த சேவை மற்றுமொரு பகுதியாகும்.”

Dr.subranursewish1“அத்தகைய சேவைகளைத் தாதியர்கள் நோயாளிகளுக்கு வழங்கினாலே அவர்களது பாதி நோய் குனமடைந்துவிடும். மீதப் பாதியைத்தான் மருந்தும் மாத்திரைகளும் குணப்படுத்தும். அதன் அடிப்படையில், தாதியர்கள் அனைவரும் இந்தத் தாதியர் தொழிலின் புனிதத் தன்மையை அறிந்து சேவையாற்ற முன்வர வேண்டும்.”

“அவ்வகையில் இவ்வாண்டு “தாதியர்கள் : சுகாதார துறையில் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய, தலைமையேற்கும் ஒரு குரல்”  எனும் கருப்பொருளோடு உலகத் தாதியர் தினம் கொண்டாடப்படவுள்ளது. மலேசிய நாட்டைப் பொறுத்தவரையில் கடந்த 1800-ம் ஆண்டுகளிலிருந்து தாதியர் சேவை வழங்கப்பட்டு வருகின்றது. அன்று தொடங்கி நாட்டில் பல தாதியர் பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டதோடு, ஆண்டுக்கு ஏறக்குறைய 3000 பேர் தாதிமை துறையில் பயிற்சிப்பெற்று, தங்கள் சேவையைத் தொடங்குவதில் மலேசிய சுகாதரா அமைச்சு வெற்றிக் கண்டுள்ளது. மேலும், நாட்டில் கடந்த ஆண்டு கணக்கறிக்கையின்படி, அரசாங்கம், தனியார், மருந்தகம், பயிற்றுனர் என அனைத்துப் பிரிவினரையும் சேர்த்து மொத்தம் 129,224 பேர் தாதியர் துறையில் தங்கள் சேவையை வழங்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.”

“பொதுவாக, மருத்துவமனைக்கு வருகைப்புரியும் நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை (Primary Care) அளிப்பது தாதியர்கள்தான். அதன் பிறகே மருத்துவ உதவியாளர்களும் மருத்துவர்களும் தாதியர்களின் முதலுதவிக்கேற்ப அடுத்தக்கட்ட சிகிச்சை வழங்குகின்றனர். அதன் அடிப்படையில் ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் ஆரம்ப நிலை மருத்துவ சிகிச்சைக்குத் தாதியர்களின் பங்கு அளப்பரியதாகும். இதன்வழி, தாதியர்கள் அவர்களது சேவைத் திறனை மேம்படுத்தி மருத்துவத்துறையில் உருமாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய உந்துசத்திகளாகின்றனர். மேலும், கிராமப்புற பகுதிவாழ் மக்களுக்குரிய மருத்துவ சேவைகளை வழங்குவதிலும் தாதியர்கள் முதன்மை வகிக்கின்றனர்.”

Dr.subranursewish2“எதிர்வரும் காலங்களில் தாதியர் தொழில் என்பது மிகவும் சவால் நிறைந்ததாகவே கருதப்படும். அத்தகைய சவால்களை எதிர்கொள்ள தாதியர் துறைக்கான அடிப்படைக் கல்வித் தகுதிகளை மேம்படுத்தப்பட வேண்டிய கடப்பாடு சுகாதார அமைச்சுக்கு உள்ளது. அதன் அடிப்படையில், தாதியர்களுக்குரிய நிபுணத்துவ துறைகளில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்குத் தாதியர்கள்  தங்களைத் தயார் படுத்திக் கொள்ள ஆலோசிக்கப்படுகின்றனர்.”

“எனவே, தன்னலம் கருதாமால் பொதுமக்களின் தேவை அறிந்து சேவையாற்றி மருத்துவ மேம்பாட்டிற்கு முதுகெலும்பாகத் திகழும் அனைத்துத் தாதியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை இந்நாளில் தெரிவித்துக் கொள்வதில் சுகாதார அமைச்சர் என்னும் முறையில் பெருமிதம் கொள்கிறேன்.” – இவ்வாறு டாக்டர் சுப்ரா தமது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.