இது குறித்து சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் பேசுகையில், “இந்திய சமுதாயத்திற்கான வியூக வரைவுத் திட்டத்தின் நிர்வாகக் குழுவில் செயல்படக்கூடிய அதிகாரிகளுடன் பல தரப்பினர் இணைந்து சேவையாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.”
“அதன் அடிப்படையில், தேசிய முன்னணியில் இருக்கக்கூடிய இந்தியர்களைப் பிரதிநிதிக்கக்கூடிய அரசியல் கட்சிகள், தேசிய முன்னணிக்கு உதவியாக இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் உட்பட நாட்டில் இருக்கக்கூடிய முக்கியமான பொது இயக்கங்கள் எனப் பல தரப்பினரின் உதவியோடு, ஆவணப் பிரச்சனைகளை எதிர்நோக்குபவர்களைக் கண்டறிந்து, அவர்களை நேரில் சென்று அணுகி பிரச்சனைகளைக் களைவதற்கான ஆயத்த வேலைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.”
“அதனைத் தொடர்ந்து, அடுத்தக்கட்ட முயற்சியாக அந்தந்த பதிவிலாகாக்களில் பதிவு செய்வதற்கான வேலைகளும் மேற்கொள்ளப்படும். ஏறக்குறைய 12 பொது இயக்கங்களின் ஆதரவின் அடிப்படையில் விரைவான முயற்சியில் இத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சியின் அடிப்படையில் எல்லோரும் ஒன்றாக இணைந்து இத்திட்டம் வெற்றிப் பெறச் செய்ய பாடுபட வேண்டும்” என டாக்டர் சுப்ரா கேட்டுக் கொண்டார்.