Home Featured உலகம் ஏமனில் எமனாய் விரட்டும் காலரா – அவசர நிலைப் பிரகடனம்!

ஏமனில் எமனாய் விரட்டும் காலரா – அவசர நிலைப் பிரகடனம்!

715
0
SHARE
Ad

Yemendiseaseசனா – ஏமன் நாட்டில் காலரா நோய் பரவி பலரும் உயிரிழந்து வருவதால் அந்நாட்டில் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரை காலராவுக்கு 50-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கின்றனர்.

சனா நகரையும் கடந்து அருகாமையிலுள்ள அமானத் அல்-செமா மாகாணம், ஹோடெய்டா, டய்ஸ் மற்றும் ஏடென் நகரிலும் காலரா நோய் வேகமாக பரவி வருகிறது.

#TamilSchoolmychoice

தற்போதைய நிலவரப்படி, ஏமனில் சுமார் மூவாயிரம் மக்கள் காலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது.