Home Featured தமிழ் நாடு செவ்வாய்க்கிழமை காலை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்!

செவ்வாய்க்கிழமை காலை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்!

871
0
SHARE
Ad

Stalin-Karunanidhi_1929706fசென்னை – நாளை செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு (இந்திய நேரம்) திராவிட முன்னேற்றக் கழகப் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சென்னையில் கூட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திங்கட்கிழமை இரவு அறிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து திமுகவின் அடுத்தகட்ட அரசியல் பரபரப்பு என்னவாக இருக்கும் என்ற பரபரப்பு தமிழகத்தை சூழ்ந்துள்ளது.

தமிழக சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையைத் தீர்மானமாக நிறைவேற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னையில் நாளை ஒன்று கூடலாம் என்றும் ஊடகங்கள் ஆரூடம் தெரிவித்திருக்கின்றன.

#TamilSchoolmychoice

இன்னொரு கோணத்தில், ரஜினிகாந்த் அரசியலில் நுழையலாம் என்ற பரபரப்பான சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில், அதனை திசை திருப்பும் வண்ணமும், தமிழகத்தில் தனது அரசியல் ஆதிக்கத்தைக் காட்டும் வண்ணமும் ஸ்டாலின் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் பார்வையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.