Home Featured நாடு 1எம்டிபி தலைமைச் செயலதிகாரியாக அருள் கந்தா தொடர்வார் – நஜிப் அறிவிப்பு!

1எம்டிபி தலைமைச் செயலதிகாரியாக அருள் கந்தா தொடர்வார் – நஜிப் அறிவிப்பு!

1014
0
SHARE
Ad

Najib-பெய்ஜிங் – 1எம்டிபி-யின் தலைமை நிர்வாக அதிகாரியாக அருள் கந்தசாமி தொடர்ந்து இருப்பார் என மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்திருக்கிறார்.

இது குறித்து நேற்று திங்கட்கிழமை சீனாவில் மலேசியச் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நஜிப், “எனக்கு அவர் மேல் முழு நம்பிக்கை இருக்கிறது. அவர் 1எம்டிபி-ஐ ஒருங்கிணைந்து நல்ல தலைமைத்துவத்தை வழங்கினார். எனவே அவர் அங்கு தொடர்ந்து இருப்பார்” என்று கூறினார்.

மேலும், டிஆர்எக்ஸ் செண்ட்ரியான் பெர்ஹாட்டின் மேம்பாட்டிலும் அருள் கந்தா பங்களிப்பை செய்வார் என்றும் நஜிப் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

பண்டார் மலேசியா மேம்பாட்டில், கருவூல பொதுச்செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் மொகமட் இர்வான் செரிகார் அப்துல்லா பொறுப்பேற்பார் என்பதோடு, அருள் கந்தாவுடன் இணைந்து ஆலோசனைகள் நடத்துவார் என்றும் நஜிப் தெரிவித்தார்.

“சந்தையில் நிறைய வதந்திகள் பேசப்பட்டு வருவதன் காரணமாக நான் இதற்கு விளக்கமளிக்கிறேன்” என்று நஜிப் தெரிவித்தார்.