சென்னை – விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் ‘பிக்பாஸ்’ என்ற புதிய நிகழ்ச்சியின் முதல் பார்வை வெளியானது.
ஏற்கனவே இந்தியில் வெளியாகி பெறும் வரவேற்பினைப் பெற்ற இந்நிகழ்ச்சியில் தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்க விரைவில் தமிழுக்கு வரவிருக்கிறது.
முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவிருக்கும் இந்நிகழ்ச்சியில் யார் யாரெல்லாம் பங்கேற்கப் போகிறார்கள் என்ற ஆவல் இப்போதே ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றது.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் முதல்பார்வையை இங்கே காணலாம்:-