Home Featured நாடு சமுதாய நலனுக்காக மஇகாவுடன் கரம் கோர்க்கும் ஐபிஎப் பிரிவுகள்!

சமுதாய நலனுக்காக மஇகாவுடன் கரம் கோர்க்கும் ஐபிஎப் பிரிவுகள்!

1192
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இந்திய சமுதாயம் பல அரசியல் கட்சிகளாகப் பிளவுபட்டிருக்கும் நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற மஇகா ஆண்டுப் பேராளர் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நஜிப் துன் ரசாக், இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்திய சமுதாய முன்னேற்றத்திற்கு ஒற்றுமையாகப் பாடுபட முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

mathi-dr subra-panjamurthy-14052017டாக்டர் சுப்ராவுடன் மு.வீ.மதியழகன் (இடது) டத்தோ பஞ்சமூர்த்தி (வலது)…

subra-ipf-dinner-senguttuvanஐபிப் செங்குட்டுவன் குழுவினரின் மாலை அணிவிப்பு…

#TamilSchoolmychoice

அதனைத் தொடர்ந்து மஇகா தலைமைத்துவமும், இந்திய அரசியல் தரப்புகளை ஒன்றிணைக்கவும், பேச்சுவார்த்தைகளின் மூலம் இணக்கமான சூழலை உருவாக்கவும் முயற்சிகளை மேற்கொண்டுவந்தது.

அத்தகைய முயற்சிகளின் பலனாக முதல் கட்டமாக, மஇகாவுக்கு வெளியே இருந்து போராடிக் கொண்டிருந்த 600-க்கும் மேற்பட்ட மஇகா கிளைகள் ஒன்றிணைந்து, மஇகாவின் முன்னாள் உதவித் தலைவர் டத்தோ எஸ்.சோதிநாதன் தலைமையில் மீண்டும் மஇகாவுக்கு திரும்பின.

ipf-subra-pandithan wife-14052017நல்லெண்ண விருந்தில் புவான்ஸ்ரீ ஜெயஸ்ரீ பண்டிதன்,மதியழகன். பஞ்சமூர்த்தி, செங்குட்டுவன், டாக்டர் சுப்ராவுடன்….

subra-ipf-dinner-speech-14052017டாக்டர் சுப்ரா உரையாற்றுகிறார்…

தொடர்ந்து, மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் மேற்கொண்டு வந்த முயற்சிகளின் பலனாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு (14 மே 2017) ஐபிஎப் கட்சியின் சில பிரிவுகளுடன் இணைந்து, நல்லெண்ண ஒற்றுமை விருந்து செர்டாங்கிலுள்ள ஒரு பிரபல தங்கும் விடுதியில், நூற்றுக்கணக்கான ஐபிஎப் ஆதரவாளர்களுடனும் ஐபிஎப் கட்சியின் முக்கியத் தலைவர்களுடனும் நடத்தப்பட்டது.

subra-panjamurthy-ipf-15052017சுப்ராவுக்கு மாலை அணிவிக்கிறார் பஞ்சமூர்த்தி….

நீண்ட காலத்திற்குப் பின்னர் கடந்த கால கசப்புகளை மறந்து ஐபிஎப் கட்சியின் தோற்றுநர் டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதன் அவர்களின் துணைவியார் புவான்ஸ்ரீ ஜெயஸ்ரீ பண்டிதன், ஐபிஎப் கட்சிப் போராட்டங்களில் கடந்த காலங்களில் பண்டிதனோடு தோள்கொடுத்துத் துணை நின்ற பினாங்கு மு.வீ.மதியழகன், டத்தோ பஞ்சமூர்த்தி, செங்குட்டுவன் போன்றவர்கள் ஒரே மேசையில் ஒன்றாக இணைந்ததும், அவர்களின் ஆதரவாளர்களும் இந்த ஒற்றுமை நல்லெண்ண விருந்தில் சேர்ந்து கொண்டதும் மாறி வரும் அரசியல் சூழலை எடுத்துக் காட்டுவதாக இருந்தது.

ipf-mic-dinner-14052017ஒற்றுமை, நல்லெண்ண விருந்தில் ஐபிஎப் ஆதரவாளர்கள், தலைவர்கள்…

subra-ipf-mathialagan-dinnerமதியழகன் குழுவினரின் மாலை அணிவிப்பு…

வழக்கம்போல் எங்கள் கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள், இணைந்து கொள்ளுங்கள் என்றெல்லாம் முழக்கங்களை மட்டும் முன்வைக்காமல், “அனைவருமே சமுதாய நன்மைக்காகப் போராடுவதால், வாருங்கள் இணைந்து போராடுவோம்” என்பதும், “இந்தியர் புளுபிரிண்ட், 14-வது பொதுத் தேர்தல் ஆகிய அம்சங்களில் ஒன்றாக இணைந்து முதலில் சமுதாயத்தையும், இந்திய சமுதாயத்தையும் வலிமைப் படுத்துவோம். பின்னர் அரசியல் ரீதியாக எப்படி ஒன்றிணைவது என்பது குறித்து சிந்திப்போம்” என்பதுதான் ஐபிஎப்புடனான நல்லெண்ண ஒற்றுமை விருந்தில் உரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டாக்டர் சுப்ராவின் மையக் கருத்தாக இருந்தது.

mathialagan-ipj-unity meet-மு.வீ.மதியழகன் மேடையில் உரையாற்றுகிறார்….

panjamurthy-ipf-15052017டத்தோ பஞ்சமூர்த்தியின் உரை…

தொடர்ந்து மற்ற ஐபிஎப் தலைவர்களும் உரையாற்றி, தங்களின் ஆதங்கங்களை, எதிர்பார்ப்புகளை எடுத்து வைத்ததோடு, ஆக்கரமான அடுத்தகட்ட செயல்பாடுகள், இணைந்த சூழல்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் தங்களின் கருத்துகளை முன் வைத்திருக்கின்றனர்.

subra-ipf-dinner-mothers dayசமுதாய – அரசியல் முழக்கங்களுக்கிடையிலும் அன்னையர் தினத்தை மறவாமல், அன்னையர்களுடன் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாட்டம்…

எப்போதுமே தேசிய முன்னணியுடனும், மஇகா தலைவர்களுடனும் இணக்கமான போக்கைக் கொண்டிருக்கும் ஐபிஎப் தலைவர்கள் இவ்வாறு ஒற்றுமை நல்லெண்ண விருந்தில் இணைவது முதன் முறையுமல்ல!

ஐபிஎப் கட்சியின் தேசியத் தலைவரான அமரர் எம்.ஜி.பண்டிதனே தனது இறுதிக் காலத்தில் மஇகாவுடன் இணக்கமான போக்கைக் கொண்டிருந்தார் என்பதையும், பொதுத் தேர்தல் என்று வரும்போது, களப் பணிகளில் தேசிய முன்னணிக்கு பக்கபலமாக இருப்பது என்ற நோக்கத்தில் மஇகா வேட்பாளர்களுக்கும் ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார் என்பதையும் ஐபிஎப் தொண்டர்கள் நினைவில் கொண்டிருப்பர்.

samyvellu-pandithan-ipf agamஅந்த நாள் ஞாபகம் – தனது மறைவுக்கு முன்னர் மஇகாவுடனும், அப்போதைய தேசியத் தலைவர் சாமிவேலுவுடனும் கரம் கோர்த்த எம்.ஜி.பண்டிதன்…

தனது மறைவுக்கு முன்பாக அப்போதைய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலுவுடன் கசப்புகளை மறந்து, தனது ஐபிஎப் ஆண்டுக் கூட்டத்திற்கு அவரையும் அழைத்து கட்டியணைத்து கௌரவப்படுத்தியவர் பண்டிதன் என்பதையும் இந்தத் தருணத்தில் நாம் நினைவு கூரவேண்டும்.

மஇகாவுடன் ஒன்றிணைந்து, ஐபிஎப் பிரிவுகளும், அதன் தலைவர்களும் இந்திய சமுதாயத்தின் நலன் ஒன்றையே பிரதானமாகக் கொண்டு போராட முன்வந்திருப்பது,

மலேசிய இந்திய அரசியலில் நல்ல தொடக்கம்!

எதிர்காலத்தில் நன்மைகளைக் கொண்டுவரக் கூடிய சிறந்த திருப்பம்!

-இரா.முத்தரசன்

படங்கள்: நன்றி – drsubra.com