புதுடில்லி – கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த முத்தலாக் எனப்படும் மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து பெறும் இஸ்லாமிய விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணைகள் இன்று முடிவுக்கு வந்த நிலையில், அந்த வழக்கின் தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கு குறித்த விவரங்களை மத்திய அரசாங்கம், அனைத்திந்திய முஸ்லீம் சமய சட்ட வாரியம், அனைத்திந்திய முஸ்லீம் மகளிர் சமய சட்ட வாரியம், போன்ற பல தரப்புகளிடமிருந்து வாதங்களாக செவிமெடுத்தது.
மே 11-ஆம் தேதி தொடங்கிய விசாரணையின் தீர்ப்பு பின்னொரு நாளில் வழங்கப்படும்.