கான்ஸ் (பிரான்ஸ்) – இங்கு நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில் சுந்தர் சி. இயக்கத்தில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வழங்கும் ‘சங்கமித்ரா’ என்ற திரைப்படம் அறிமுகம் காண்கிறது.
இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
#TamilSchoolmychoice
அதனை முன்னிட்டு அந்த படக் குழுவினர் தற்போது கான்ஸ் நகரில் முகாமிட்டிருக்கின்றனர்.
அழகிய கடற்கரைக்குப் புகழ்பெற்ற நகர் கான்ஸ். கடற்கரையோரம் காற்று வாங்கும், படக் குழுவினர் – கலை இயக்குநர் சாபு சிரில், ஏ.ஆர்.ரஹ்மான், சுந்தர் சி, சுருதிஹாசன், ஆர்யா, ஜெயம் ரவி…
டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் ‘சங்கமித்ரா’ படக் குழுவினர் பகிர்ந்து கொண்டிருக்கும் படக் காட்சிகளில் சில உங்களின் பார்வைக்கு:-
சங்கமித்ரா படத்தின் முதல் தோற்றம்…
தனது மனைவி குஷ்புவுடன் தம்படம் (செல்பி) எடுத்துக் கொள்ளும் சங்கமித்ரா இயக்குநர் சுந்தர் சி.
கான்ஸ் திரைப்பட விழாவுக்கு கோட்-சூட்டுடன் களமிறங்கும் சங்கமித்ரா படக் குழுவினர்…
சிவப்புக் கம்பள வரவேற்பில் கலக்கும் சுருதிஹாசன்…சங்கமித்ரா படத்தின் கதாநாயகி…
இயக்குநர் சுந்தர் சி-குஷ்பு
சங்கமித்ரா படத்தின் இன்னொரு காட்சி
சங்கமித்ரா சுவரொட்டி பின்னணியில் – படக் குழுவினர்…