Home Featured நாடு மஇகா தலைமையகம் முன் பெர்காசா ஆர்ப்பாட்டம்!

மஇகா தலைமையகம் முன் பெர்காசா ஆர்ப்பாட்டம்!

924
0
SHARE
Ad

perkasa-protest-mic hq-21052017

கோலாலம்பூர் – மஇகாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து வரும் தீவிரவாத மலாய்-முஸ்லீம் இயக்கமான பெர்காசா இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மஇகா தலைமையகக் கட்டிடத்திற்கு முன்னால் தங்களின் கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

பெர்காசா இளைஞர் பகுதித் தலைவர் அஸ்ருல் அக்மால் சஹாருடின் இந்த எதிர்ப்புப் போராட்டத்தை முன்னின்று நடத்தினார்.

#TamilSchoolmychoice

மஇகா பொருளாளர் டத்தோஸ்ரீ வேள்பாரி பெர்காசாவுக்கும், சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கும் எதிராக விடுத்த பத்திரிக்கை அறிக்கைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் மஇகாவுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறும் என அஸ்ருல் தெரிவித்திருக்கிறார்.

மஇகா போட்டியிடும் தொகுதிகளில் உள்ள மலாய்-முஸ்லீம் வாக்காளர்கள் மஇகா வேட்பாளர்களுக்கு எதிராக வாக்களிக்கும்படி பெர்காசா பிரச்சாரம் செய்யும் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.