Home Featured இந்தியா மோடியைச் சந்திக்கிறார் ரஜினி!

மோடியைச் சந்திக்கிறார் ரஜினி!

962
0
SHARE
Ad

Rajiniபுதுடெல்லி – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, நடிகர் ரஜினிகாந்த் விரைவில் சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

தான் அரசியலுக்கு வருவது ஆண்டவனின் கையில் இருக்கிறது என்று ரஜினி சொன்னாலும் கூட, ஆளுங்கட்சியான பாஜக தொடர்ந்து ரஜினிக்கு அழைப்பு விடுத்துவருவதாகத் தெரிகின்றது.

அண்மையில் ரஜினியைச் சந்தித்த பாஜக தலைவர் ஒருவர், டில்லியில் மோடியைச் சந்திக்கும் படி கேட்டுக் கொண்டதாகவும், அதன் படி, ரஜினி விரைவில் மோடியைச் சந்திப்பார் என்றும் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இதனிடையே, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வெளியிட்டிருக்கும் கருத்தில், ரஜினிக்காக எப்போதும் பாஜக-யின் கதவுகள் திறந்தே இருப்பதாகவும், அரசியலில் நுழைவது குறித்து ரஜினி தான் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.