Home Featured நாடு ஜோகூரில் 9 கடற்படை அதிகாரிகளுடன் படகு மாயம்!

ஜோகூரில் 9 கடற்படை அதிகாரிகளுடன் படகு மாயம்!

984
0
SHARE
Ad

Johorwaterஜோகூர் – ஜோகூர் கடற்பகுதியில் கடந்த வாரம் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படைப் படகு மாயமானது. இந்நிலையில், அதிலிருந்த 9 கடற்படை அதிகாரிகளையும் தேடும் பணி நடைபெற்று வருகின்றது.

இது குறித்து மலேசியக் கடற்படை நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “கேடி பெர்டானா என்ற படகு கடந்த புதன்கிழமை இரவு 8.13 மணியளவில் செடிலி கடற்பகுதியில், தகவல் தொடர்பிலிருந்து விடுபட்டு மாயமானது என்பதை மலேசியக் கடற்படை உறுதிப்படுத்துகிறது” என்று தெரிவித்திருக்கிறது.

தற்போது மாயமான படகையும், அதிகாரிகளையும் தேடும் பணியில் மலேசியக் கடற்படை ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice