Home Featured நாடு காமன்வெல்த் அமைச்சர்கள் மாநாட்டில் டாக்டர் சுப்ரா! (படக் காட்சிகள்)

காமன்வெல்த் அமைச்சர்கள் மாநாட்டில் டாக்டர் சுப்ரா! (படக் காட்சிகள்)

613
0
SHARE
Ad

subra-commonwealth-ministers-meet-21052017 (1)ஜெனிவா – மலேசிய சுகாதார அமைச்சரும் ம.இ.காவின் தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21 மே 2017) ஜெனிவாவில் நடைபெற்ற 29-வது காமன்வெல்த் சுகாதார அமைச்சர்களுக்கான சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

subra-commonwealth-ministers-meet-21052017 (3)காமன்வெல்த் அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பாளர்களுடன் சுப்ரா…

subra-WHA-2017-geneva-21052017 (1)மற்ற காமன்வெல்த் அமைச்சர்களுடன் சுப்ரா…

#TamilSchoolmychoice

தொடர்ந்து இன்று மே 22ஆம் தேதி தொடங்கி மே 31-ஆம் தேதி வரையில் நடைபெறும்  70-வது உலகச் சுகாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவும் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா நகரத்திற்கு டாக்டர் சுப்ரா அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டுள்ளார்.

29-வது காமன்வெல்த் சுகாதார அமைச்சர்களுக்கான சந்திப்புக் கூட்டத்தில் காமன்வெல்த் சுகாதார அமைச்சர்கள் ஒவ்வொருவராகத் தங்களின் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவர்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

subra-commonwealth-ministers-meet-21052017 (4)

subra-WHA-2017-geneva-21052017 (6)காமன்வெல்த் அமைப்பின் தலைமைச் செயலாளர்

இக்கூட்டத்தில் டாக்டர் சுப்ரா “உலகளாவிய சுகாதார பாதுகாப்புக்கான நிலையான நிதி” தலைப்பில் நடத்தப்பட்ட முதல் வட்டமேசை கலந்துரையாடலுக்குத் தலைமை தாங்கினார்.

subra-WHA-2017-geneva-21052017 (7)வட்டமேசை கலந்துரையாடலுக்குத் தலைமை தாங்கும் டாக்டர் சுப்ரா…

70-வது உலக சுகாதார மாநாட்டில் கலந்து கொள்ள சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலைமையில் வருகை மேற்கொண்டிருக்கும் மலேசியக் குழுவுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சுவிட்சர்லாந்துக்கான மலேசியத் தூதர் தனது இல்லத்தில் விருந்தபசரிப்பு நடத்தி கௌரவித்தார்.

subra-WHA-2017-geneva-21052017 (8)

ஐக்கிய நாடுகளுக்கான மலேசியாவின் நிரந்தரத் தூதர் டத்தோ ஏ.முகமட் சின் தனது இல்லத்தில் வழங்கிய விருந்துபசரிப்பில் டாக்டர் சுப்ரா மற்றும் அவரது துணைவியார் டத்தின்ஸ்ரீ உமாராணி…

படங்கள் – நன்றி : drsubra.com