Home Featured நாடு தமிழ்ப்பள்ளிகளுக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி

தமிழ்ப்பள்ளிகளுக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி

761
0
SHARE
Ad

PTD-Photo

கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் கடந்த 34 ஆண்டுகளாக சமுதாய நலன் கருதி பயன்மிக்கத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இவ்வியக்கத் திட்டங்களில் ஒன்றுதான் தித்தியான் டிஜிட்டல் திட்டம்.

இத்திட்டம் 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 9 வருடங்களாக செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலகமய மாறுதலுக்கேற்ப தகவல் தொடர்புத் தொழில்நுட்ப திறனறிவை (ICT) பெற்றிருப்பதை உறுதிப்படுத்தும் பொருட்டு சீரிய முறையில் செயல்வடிவம் காணப்பெற்று வருகின்றது.

#TamilSchoolmychoice

புறநகர், நகர்புற மாணவர்களிடையே இருந்து வரும் தகவல் தொடர்புத் திறனறிவு தொழில்நுட்ப இடைவெளியை குறைக்க இத்திட்டம் பெரும் பங்காற்றி வருகின்றது. தித்தியான் டிஜிட்டல் திட்டம் அமைக்கப்பட்டதன் வழி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சுற்று வட்டார பொது மக்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் அமைந்திருக்கின்றது.

PTD-ICT

தமிழ்ப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இவ்வாண்டு தேசிய அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியினை ஏற்பாடு செய்துள்ளது. கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம், மலேசிய சமூகக் கல்வி அறவாரியம் ஏற்பாட்டிலும் உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (Infitt) என்ற அனைத்துலக இயக்கத்தின் இணை ஏற்பாட்டில், செடிக் (SEDIC) எனப்படும் பிரதமர் துறை பிரிவின்ஆதரவோடு  இப்போட்டி நடைபெறுகின்றது.

மாநில அளவிலும், தேசிய அளவிலும் நடைபெறவிருக்கும் இப்போட்டியின் இறுதிச் சுற்று எதிர்வரும் 05/08/2017, காலை 8.00 மணி முதல் IPPP மலாயா பல்கலைகழகத்தில் நடைபெற உள்ளது .

தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகள் :

  1. வரைதல் போட்டி (Drawing)
  2. ஸ்க்ராட்ச் (Scratch) வடிவமைத்தல் போட்டி
  3. இருபரிமான அசைவூட்ட வடிவமைத்தல் போட்டி
  4. அகப்பக்கம் வடிவமைத்தல் போட்டி
  5. தகவல் தொடர்பு தொழில்நுட்ப புதிர்ப் போட்டி

மேல் விபரங்களுக்கு :

  1. கலையரசன் நடராஜன் – 016 4876 512
  2. கலைவாணி சோமையா – 010 3690 432

அகப்பக்கம் : www.titiandigital.com

வலைப்பூ : www.titiandigital.blogspot.com