Home Featured கலையுலகம் மலேசியாவில் ‘வேலைக்காரன்’ படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு!

மலேசியாவில் ‘வேலைக்காரன்’ படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு!

1352
0
SHARE
Ad

Sivakarthikeyanகோலாலம்பூர் – கடந்த 23 நாட்களாக மலேசியாவில் நடைபெற்று வந்த சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இந்நிலையில், அத்திரைப்படத்தின் இயக்குநர் ராஜா மோகன் தனது டுவிட்டர் பக்கத்தில் மலேசிய மக்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

“எனக்குப் பிடித்த இடமான மலேசியாவில், 3-வது படப்பிடிப்பு. திட்டமிட்டபடி அனைத்தும் இன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. அன்பான தமிழர்களுக்கும், எங்களுக்கு அவர்கள் செய்த உதவிகளுக்கும் தலை வணங்குகிறேன்” என்று மோகன் ராஜா டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், ‘வேலைக்காரன்’ திரைப்படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயனும், “படப்பிடிப்பு நிறைவடைந்தது. உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி மலேசியா” என்று டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

படப்பிடிப்பின் போது தினமும் தன்னைப் பார்க்க வந்த ரசிகர்களுடன், புகைப்படம் எடுத்துக் கொள்வதும், கலந்துரையாடுவதுமாக சிவகார்த்திகேயன் மிகவும் அன்போடு நடந்து கொண்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

வரும் செப்டம்பர் மாதம் வெளியிடத் திட்டமிட்டிருக்கும் இத்திரைப்படத்தில், நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார் என்பதோடு, சினேகா, பஹத் பாசில், பிரகாஷ் ராஜ், சதிஸ், ஆர்.ஜே.பாலாஜி, ரோபோ சங்கர், விஜய் வசந்த், சார்லி மற்றும் ரோஹினி ஆகியோரும் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.