லண்டன் – வடக்கு இங்கிலாந்தில் திங்கட்கிழமை இரவு, அரியான் கிராண்டே என்ற பிரபல அமெரிக்க இளம் பாடகியின் இசை நிகழ்ச்சி நடைபெற்ற வளாகத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 19 பேர் மரணமடைந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், இத்தாக்குதல் சம்பவத்திற்குக் காரணமான முக்கிய குற்றவாளியின் பெயரை லண்டன் காவல்துறை அறிவித்திருக்கிறது.
அவர் பெயர் சல்மான் அபேதி (வயது 22) என்றும், லிபியாவில் இருந்து அகதியாக இங்கிலாந்திற்கு வந்தவன் என்றும் காவல்துறைத் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.
இத்தாக்குதலை நடத்திய நோக்கம் என்ன? தனித்துச் செயல்பட்டானா? அல்லது குழுவாகச் செயல்பட்டானா? என்பது குறித்து புலனாய்வுத்துறை விசாரணை நடத்தி வருகின்றது குறிப்பிடத்தக்கது.