இது குறித்து இன்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய காலிட், “கோ கடத்தல் சம்பவத்தில் அவருக்குத் தொடர்பு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். எனினும், இந்த வழக்கில் இன்னும் முழுமையாக விசாரணை நடத்துவோம்” என்று தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி 13-ம் தேதி, பெட்டாலிங் ஜெயாவில், ரேமண்ட் கோ என்ற 62 வயதான பாதிரியார், சில மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். அதற்கு சாட்சியாக இரகசிய கேமராவில் பதிவாகியிருந்த காணொளி இணையத்தில் வெளியானது.
எனினும், 3 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை ரேமண்ட் கோ இருக்கும் இடம் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments