Home நாடு ஆயர் கோ கடத்தல் விவகாரம்: சுஹாகாம் விசாரணையை நிறுத்தியது!

ஆயர் கோ கடத்தல் விவகாரம்: சுஹாகாம் விசாரணையை நிறுத்தியது!

1056
0
SHARE
Ad

Pator Kohகோலாலம்பூர் – ஆயர் கோ கடத்தல் விவகாரத்தில், மலேசிய மனித உரிமை ஆணையமான சுஹாகாம் தனது விசாரணையைத் தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக அறிவித்திருக்கிறது.

ஆயர் கோவின் குடும்பத்திடமிருந்து பணம் பெற்ற ஒருவர் மீதும் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதையடுத்து சுஹாகாம் இம்முடிவை எடுத்திருக்கிறது.

நீதிமன்ற வழக்குகளில் தலையிட்டு விசாரணை நடத்த தங்களுக்கு அனுமதியில்லை என்றும் சுஹாகாம் தெரிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

சுஹாகாமின் இந்த முடிவை அறிந்து ஆயர் கோவின் குடும்பம் அதிர்ச்சியடைந்திருக்கிறது.

குற்றம் சுமத்தப்பட்ட அந்நபருக்கும், இந்தக் கடத்தலுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லையென காவல்துறையே தெரிவித்துவிட்டதாக ஆயர் கோவின் குடும்பம் சுஹாகாமிடம் கூறியிருக்கிறது.