Home நாடு பாதிரியார் கோ கடத்தல்: போலீஸ் பாணியில் உள்ளதாக அதிகாரி தகவல்!

பாதிரியார் கோ கடத்தல்: போலீஸ் பாணியில் உள்ளதாக அதிகாரி தகவல்!

1222
0
SHARE
Ad

Pator Kohகோலாலம்பூர் – பாதிரியார் ரேமண்ட் கோ, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கடத்தப்பட்ட முறை, அப்படியே காவல்துறையின் நடவடிக்கை போல் இருப்பதை சிலாங்கூர் குற்றப்புலனாய் துறைத் தலைவர் ஃபாட்சில் அகமட், மனித உரிமை ஆணையமான சுஹாகாமிடம் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

“நான் என்ன சொல்கிறேன் என்றால், நுழைவது, வெளியேறுவது, கைது செய்வது உள்ளிட்ட காவல்துறை நடவடிக்கைகள் மிகவும் ஒருங்கிணைப்பாக இருக்கும். அதே போல் தான் இந்தக் காணொளியில் (கோ கடத்தல் காணொளி) உள்ள சம்பவம் உள்ளது. எங்களுக்கும் அதே போன்ற நடவடிக்கைகள் உள்ளன” என்று ஃபாட்சில் அகமட் சுஹாகாமிடம் தெரிவித்திருக்கிறார்.