Home Featured உலகம் பிலிப்பைன்சில் இராணுவ ஆட்சி!

பிலிப்பைன்சில் இராணுவ ஆட்சி!

840
0
SHARE
Ad

Rodrigo duterte-philippines-

மணிலா – தென் பிலிப்பைன்சில் நேற்று புதன்கிழமை இராணுவ ஆட்சியை அமுல்படுத்திய அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுடெர்ட்டே (படம்), தேவைப்பட்டால் பிலிப்பைன்ஸ் முழுவதும் இராணுவ ஆட்சியைக் கொண்டு வருவேன் என எச்சரித்திருக்கிறார்.

ஓராண்டுக்கு முன்னால் பிலிப்பைன்ஸ் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டுடெர்ட்டே நாடு கீழ்நிலைக்குச் செல்வதற்கு தன்னால் அனுமதிக்க முடியாது என்றும் அறைகூவல் விடுத்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

தென் பிலிப்பைன்சில் இராணுவத்தினருக்கும், இஸ்லாமியத் தீவிரவாதப் பிரிவினருக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மோதல்களில் இதுவரை 21 பேர்வரை மரணமடைந்திருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து தென் பிலிப்பைன்ஸ் முழுவதும் இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்படுவதாக டுடெர்ட்டோ அறிவித்தார்.

இராணுவ ஆட்சி கடுமையான கெடுபிடிகளைக் கொண்டிருக்கும் என எச்சரித்த டுடெர்ட்டே, இராணுவத்தின் அத்துமீறல்களை அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறினார். அதேசமயம், நீதிமன்றங்கள் திறந்திருக்கும் என்ற அவர் அரசாங்கத்தை துப்பாக்கி கொண்டும், தீவிரவாதம் கொண்டும் எதிர்க்க நினைப்பவர்களை அரசாங்கம் துடைத்தொழிக்கும் என்று எச்சரித்தார்.