கோலாலம்பூர் – நேற்று புதன்கிழமை இரவு கிழக்கு ஜாகர்த்தாவில் உள்ள கம்போங் மலாயு பேருந்து நிலையத்தில், நடந்த குண்டு வெடிப்பையடுத்து, இந்தோனிசியாவில் வசித்து வரும் மலேசியர்கள் தங்களது வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும் படி மலேசிய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தோனிசியாவுக்கான மலேசியத் தூதர் ஜாரெயின் மொகமட் ஹாஷிம் கூறுகையில், ஜாகர்த்தாவில் மட்டுமல்ல, இந்தோனிசியாவின் பல பகுதிகளில் மலேசியர்கள் வாழ்கிறார்கள். எனவே மலேசியர்கள் யாரும் பாதிப்படையவில்லை என்பதை உறுதிப்படுத்த இந்தோனிசியக் காவல்துறையின் உதவியையும் நாடியிருக்கிறோம். இதுவரை அது போன்ற எந்த ஒரு புகாரும் வரவில்லை” என்று தெரிவித்தார்.