Home Featured தமிழ் நாடு போயஸ் கார்டன் வீடு எங்களுக்குத் தான் சொந்தம் – தீபா அறிக்கை!

போயஸ் கார்டன் வீடு எங்களுக்குத் தான் சொந்தம் – தீபா அறிக்கை!

1001
0
SHARE
Ad

deepa-jayakumar-jayallithaa-nieceசென்னை – தன் அத்தையான மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவருக்குச் சொந்தமான போயஸ் கார்டன் வீடும், மற்ற சொத்துக்கள் அனைத்தும் தங்களுக்குத் தான் சட்டப்படி சேர வேண்டும் என்றும், தாங்கள் தான் வாரிசுகள் என்றும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா அறிக்கை விடுத்திருக்கிறார்.

இது குறித்து தீபா கூறியிருப்பதாவது:-

“எனது பாட்டி காலத்தில் நாங்கள் அத்தையுடன் ஓடி விளையாடிய எங்கள் பூர்வீக இல்லத்தில் இருந்து இடையில் சதிகாரர்களால் பிரித்து வைக்கப்பட்டோம்.”

#TamilSchoolmychoice

“தற்போது ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளின் போலி வேடதாரிகளை அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் அடையாளம் கண்டு எனது தலைமையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் எழுச்சியோடும், உணர்ச்சியோடும் செயல்பட்டு வருவதை சகிக்க முடியாத கூட்டம் என் வளர்ச்சியைத் தடுப்பதற்காக நினைவு இல்ல நாடகத்தை அரங்கேற்ற எத்தனிக்கிறார்கள்.”

“என்னைப் பொறுத்தவரை அம்மா வாழ்ந்த இல்லத்தை கோவிலாகக் கருதுகிறேன். தற்போது மக்களால் புறக்கணிக்கப்பட்ட கூட்டம் என் அத்தையை வஞ்சித்த கூட்டம், வஞ்சகர்கள் கூட்டம். ஊழல் கறைபடிந்த கூட்டம், நினைவு இல்லம் என்ற பெயரில் போயஸ் தோட்டத்தை அபகரிக்க தீய திட்டம் தீட்டியுள்ளார்கள்.”

“அம்மாவின் ரத்த வாரிசான என்னைப் பழி வாங்கும் நோக்கத்தோடு என் அத்தையிடமிருந்து எல்லாவற்றையும் அபகரித்தவர்கள் என்னிடம் இருந்து என் தாயை போன்ற அத்தையை அபகரித்தவர்கள் மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்த தியாகத் தலைவியை மக்களால் காண முடியாமல் செய்தவர்கள் இன்று இல்லத்தைக் காட்டி அனுதாபம் தேடி தங்களுடைய தவறுகளை மறைக்க பார்க்கிறார்கள்.”

“அத்தைக்காக நான் அவர்கள் வழியில் மக்களுக்காக பணியாற்றுவேன். நானும் என் சகோதரர் தீபக்கும் மட்டும் தான் அனைத்து சொத்துக்களுக்கும் முறையான சட்டப்பூர்வமான வாரிசு. எங்களிடம் முறையாகவோ சட்டரீதியாகவோ அனுமதி பெறாமல் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவது சட்டரீதியான மற்றும் தார்மீக ரீதியான முறைகேடாகும்.”-இவ்வாறு தீபா கூறியிருக்கிறார்.