“தனது வருமானம் குறித்து மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்திடம் மறைக்கும் நோக்கம் அவருக்கு இருந்திருக்கவில்லை என இந்த நீதிமன்றம் கருதுகிறது. மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் விண்ணப்ப பாரத்தை குற்றம் சாட்டப்பட்டவர் முறையாக நிரப்பியிருக்கிறார்” என்று நீதிபதி சோஹைனி அலியாஸ் கூறினார்.
கடந்த 2014-ம் ஆண்டு, ஜனவரி 8-ம் தேதி, சட்டப்பிரிவு 49(3)-ன் கீழ், கூ தனது வந்த வருமானம் குறித்து ஊழல் ஒழிப்பு ஆணையத்திடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டார்.
இக்குற்றத்தை அவர், கடந்த 2013-ம் ஆண்டு, டிசம்பர் 23-ம் தேதியிலிருந்து 2014-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி வரைக்குள் செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டியது ஊழல் ஒழிப்பு ஆணையம்.