Home Featured கலையுலகம் “காலா” – படப்பிடிப்புக்காக மும்பையில் ரஜினி!

“காலா” – படப்பிடிப்புக்காக மும்பையில் ரஜினி!

1021
0
SHARE
Ad

Kaala-rajni-poster

மும்பை – இன்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் ‘காலா’ புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் மும்பை சென்றடைந்துள்ளார்.

மும்பை செல்வதற்கு முன் தனது இல்லத்திலும், விமான நிலையத்திலும் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ரஜினி வழக்கம்போல் “நேரம் வரும்போது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பேன். அதுவரையில் எனது பணி சினிமாவில் நடிப்பது. அதைச் செய்ய விடுங்கள்” எனக் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

kaala-rajini-movie-poster-1

‘காலா’ படத்தில் நடிக்கும் மற்ற நடிக-நடிகையர் யார் என்பது குறித்து கொஞ்சம் கொஞ்சமாக விவரங்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

‘காலா’ படத்தில் சமுத்திரகனி நடிப்பது உறுதியாகியுள்ளது. இயக்குநர் பா. ரஞ்சித்துடன் அவர் இணைந்து எடுத்துக் கொண்டிருக்கும் படம் டுவிட்டர் பக்கங்களில் வெளியிடப்பட்டிருக்கின்றது.

சமுத்திரகனியும் தற்போது மும்பையில் ‘காலா’ படத்திற்காக முகாமிட்டுள்ளார்.

samuthirakani-rajnith-kaalaசமுத்திரகனியுடன் பா.இரஞ்சித்…