Home Featured நாடு பினாங்கு இந்தியர் விளையாட்டுப் போட்டிகள்! டி.மோகன் தொடக்கி வைத்தார்.

பினாங்கு இந்தியர் விளையாட்டுப் போட்டிகள்! டி.மோகன் தொடக்கி வைத்தார்.

693
0
SHARE
Ad

mohan-t-misc-penang indian sports (2)

பினாங்கு – பினாங்கு மாநில இந்திய  இளம் விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் வண்ணமும், மேலும் தரமான விளையாட்டாளர்களை இனம் கண்டு அவர்களை மென்மேலும் உயர்த்தும் நோக்கிலும் பினாங்கு மாநில எம்.ஐ.எஸ்.சி.எப் இன் (Malaysian Indian Sports Council – MISC) ஏற்பாட்டில் முதன் முறையாக பினாங்கு  இந்தியர் விளையாட்டுப் போட்டிகள் உதயமாகியுள்ளன.

இதனை எம்.ஐ.எஸ்.சி.எப் எனப்படும் மலேசிய இந்தியர் விளையாட்டு கலாச்சார அறவாரியத்தின் தலைவர் டத்தோ டி.மோகன் சனிக்கிழமை (27 மே 2017) அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து சிறப்பித்தார்.

#TamilSchoolmychoice

முதலாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் 9 விளையாட்டுப் போட்டிகள் முறையே ஓட்டப்பந்தயம், டென்னிஸ், பேட்மிண்டன், ஹாக்கி, கபடி, சிலம்பம், கராத்தே, தேக்குவண்டோ, ஸ்குவாஷ் ஆகிய பிரிவுகளில் இடம் பெற்றுள்ளன.

mohan-t-misc-penang indian sports (3)

கிட்டத்தட்ட 700-க்கும் மேற்பட்ட விளையாட்டாளர்கள் இந்தப் போட்டிகளில் பங்கெடுத்துள்ளார்கள் என போட்டி ஏற்பாட்டுக் குழுத்தலைவர் கமலேஷ் கூறினார்.

இரண்டு நாட்கள் அரங்கேறும் இந்தப்போட்டிகள் குறித்து, மஇகா தேசிய உதவித் தலைவருமான டத்தோ டி.மோகன் அவர்கள் குறிப்பிடுகையில் நமது இந்திய சமுதாயத்தின் கடந்த கால விளையாட்டுத்துறை வரலாற்றை மீட்டெடுக்கும் நோக்கில்  எம்.ஐ.எஸ்.சி.எப் செயல்பட்டு வருகிறது.

அதனையடுத்து  சுக்கிம் போட்டிகள் நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்டன். சுக்கிம் சுக்மாவின் முன்னோட்டமாகவும் அரங்கேறியது. மேலும் மாநில அளவில் நமது விளையாட்டு வீரர்களுக்கு களத்தை அமைத்துக்கொடுக்கும் நடவடிக்கையாக  இந்தப்போட்டிகள் நடைபெறுகின்றன என்றார்  அவர். நமது சமுதாயத்திற்கு விளையாட்டுத்துறை முன்னேற்றம் மிக மிக அவசியம். விளையாட்டுத் துறையின் வழி நமது இளைஞர்கள் பொருளாதாரத்திலும் சிறந்து விளங்க முடியும்.

mohan-t-misc-penang indian sports (4)

இந்த வேளையில் சமுதாய விளையாட்டுத்துறை முன்னேறத்தை மனதில் வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக மோகன் கூறினார்.

இந்த விழாவில் எம்.ஐ.எஸ்.சி.எப் இன் துணைத்தலைவர் ஜெ.தினகரன், டத்தோ ஞானசேகரன், சங்கர் முனியாண்டி, சமுதாய விளையாட்டுத்துறை ஆர்வலர்கள் , பெற்றோர்கள், மாநில மஇகாவினர்  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பினாங்கு மாநில இளம் விளையாட்டாளர்கள் ஆர்வத்தோடும், உற்சாகத்தோடும் போட்டிகளில் பங்கெடுத்தனர். சமுதாயத்தில் விளையாட்டுத்துறை மூலம் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாக எம்.ஐ.எஸ்.சி.எப் இன் நடவடிக்கைகளை போட்டிகளில் கலந்து கொண்டவர்களின் பெற்றோர்கள் வெகுவாக பாராட்டினர்.